Skip to product information
1 of 1

My Store

நாரத ராமாயணம் [Narada Ramayanam]

நாரத ராமாயணம் [Narada Ramayanam]

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out

Author: புதுமைப்பித்தன் (pudhumaipithan)

Category: Novel


Pages: 72



நாரத ராமாயணம் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி, கிண்டல். எழுதித் தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தியா வரையான நினைவுகளையே இந்த நூல் பேசுகிறது. தனது கடந்த காலம் அறியாத ஒரு சமூகம் எப்படி உருவாகிறது என்பதை சுட்டிகாட்டும் அதே வேளையில் காலம் எப்படி உருமாற்றுகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது.

ராமனின் முதுமையில் துவங்கி சமகாலம் வரை நீள்கிறது. வம்சாவழியின் கதையை சொல்வதாக நீண்டு காலனி ஆட்சி எப்படி துவக்கியது, அதன் காரணமாக நடைபெற்ற மாற்றங்கள், ஏற்பட்ட தனிமனித வீழ்ச்சிகள், அதன் துயரை பகடியாக விவரிக்கிறது. சிரிப்பின் உச்சம் அழுகை என்பார்கள். நாரத ராமயணத்தை வாசித்து முடிக்கையில் அடையும் சந்தோஷத்துடன் இழப்பின் வலியும் ஒன்று சேர்கிறது.

பகடி மேல் பகடியாக விரியும் பிரதி தலைமுறைகளை தாண்டி நீளும்போது மெல்ல பகடி மறைந்து வரலாறு எப்படி உருவாகிறது, யார் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள், வீழ்ச்சி ஒரு குடும்பத்தை என்ன செய்கிறது என்று ஆழ்ந்த வேதனையூட்டும் பிரதியாகிறது. அதுவே புதுமைபித்தனின் உயர்ந்த எழுத்தின் சாட்சியம்.

புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தஅழிசி பதிப்பகம்
கம் எழுதியிருக்கிறார் என்றுகூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன்.

- எஸ். ராமகிருஷ்ணன்

View full details