Collection: Su Venugopal
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20, 1967) நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளர். சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தேனி மாவட்டத்தில் விவசாயப் பின்னணியில் வளர்ந்த சு. வேணுகோபாலின் புனைவுலகு பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததும், கிராமியப் பின்னணி கொண்டதுமாகும்.